சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த திவ்யா மோனிஷா என்ற மருத்துவரும் திருச்சியை சேர்ந்த லெனின் என்ற மருத்துவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த நிலையில் இருவரும் நேற்று கோயிலில் காதல் திருமணம் செய்துள்ளனர்.
இதனை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என கூறி காதல் திருமணத்திற்கு பெண் மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் காதல் திருமணம் முடித்த மருத்துவர்கள் இருவரும் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மாற்று சமூகம் என்பதால் மருத்துவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
”பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபருடன் செல்ல, ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயதுடை பெண் விரும்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பெண் மேஜர் என்பதால் அவரின் விருப்பப்படி செல்லாம் என நீதிபதிகள் சமீபத்தில் உத்தரவிட்டது வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மருத்துவர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல்துறையினர் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !