மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொலைந்து போன மற்றும் திருடு போன 36 லட்சம் மதிப்புள்ள 359 செல்போன்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
செல்போன்கள் ஒப்படைப்பு
மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் தொலைந்துபோன மற்றும் திருடுபோனதாக பதியபட்ட வழக்கில், ரூ.36 லட்சம் மதிப்பிலான செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தொலைந்துபோன 326 செல்போன்கள். அதேபோல் திருடு போன 10 லட்சம் மதிப்புள்ள 23 செல்போன்கள் என, மொத்தம் 46 லட்ச ரூபாய் மதிப்பிலான 359 செல்போன்கள் வழக்கின் மூலம் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சைபர் கிரைம் உதவி
இது குறித்து காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரை சந்தித்து பேசுகையில்," ஐ.எம்இ.ஐ நம்பர் கொண்டு சைபர் கிரைம் மூலம் தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்களை தனிப்படை அமைத்து மீட்கப்பட்டு இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில்
மதுரை மாநகரில் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 326 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் 326 செல்போன்கள் மீட்கப்பட்டன. (கோவில் சரகம் -21. தெற்குவாசல் சரகம் -06, திருப்பரங்குன்றம் சரகம் 10, அவனியாபுரம் சரகம் -08, திடீர்நகர் சரகம் 56, திலகர் திடல் சரகம் 16, தல்லாகுளம் சரகம் 129, செல்லூர் சரகம் -14, அண்ணாநகர் சரகம் 66) மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாநகரில் திருடப்பட்ட செல்போன்களை ரூபாய் 100000 மதிப்புள்ள 33 செல்போன்கள் மீட்டகப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 67 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்ளை அளித்தனர். காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் போக்குவரத்து (பொறுப்பு - தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கழிவறை திறப்பு விழாவிற்கு முன்பே காணாமல் போன பொருட்கள் - அப்செட்டான அமைச்சர் பி.டி.ஆர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ECR பக்கம் போகும் காதல் ஜோடிகளின் கவனத்திற்கு! குரூப்பாக சுற்றும் ரவுடி கும்பல்! எச்சரிக்கும் போலீஸ்!