கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரிபட்டு  வெங்கடேசன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெங்கடேசனை அவருடைய பக்கத்து வீட்டின் உறவினர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அனுமத்தித்துள்ளார்.


 


கள்ளச்சாராயம் என்பது ஏதோ கிராமப்புறங்களிலோ,மலை கிராமங்களிலோ விற்பனை செய்யப்படும் என்பதுதான் பொது பார்வையாக இருந்து வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைநகரிலேயே, கள்ளச்சாராயம் படுஜோராக விற்பனை நடந்ததை தொடர்ந்து 110 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 


மெத்தனால் கலந்த விஷ சாராயம்


இதுவரை கள்ளச்சாராயம் விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்பொழுது உயிரிழப்பு ஏற்படுவதற்கு, கள்ளச்சாராயணத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. மெத்தனாலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, கள்ளச்சாராயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


கள்ளச்சாராயம் என்பது பொதுவாக அவற்றைக் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இது போன்ற கலாச்சாராயத்தில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் கலந்து விற்கப்படும் கள்ளச்சாராயம், சிறிய தப்பு நடந்தால் கூட அது விஷமாக மாறிவிடும் .  இதை குடித்ததனால் தான் உயிரிழப்புகள் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடரும் சிகிச்சை


நேற்று முதலே தொடர்ந்து விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 108 ஆம்புலன்ஸ் உதவியுடனும் அவர்களுடைய சொந்த வாகனத்திலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக வரத் துவங்கி விட்டனர். கள்ளச்சாராயம் குடித்ததில் முதன் முதலில் உயிரிழந்த சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர்களின் உயிரிழப்பை தொடர்ந்து உயிரிழப்பும், கலாச்சாராயம் குடித்து பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது.


இருசக்கர வாகனத்தில்


இதனால் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை கூட மூன்று நபர்கள் புதிதாக கலாச்சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டதாக மூன்று பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.


இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரிபட்டு வெங்கடேசன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவிற்கு வெங்கடேசனை அவருடைய பக்கத்து வீட்டின் உறவினர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அனுமத்தித்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்ததாக அவர்கள் உறவினர்கள் தெரிவித்தனர்