ஆதினமடத்திற்கு சென்று வைகையாறு தூய்மைப் பணி என்ற பெயரில் பணம்கேட்டு மிரட்டியது தொடர்பாக மதுரை ஆதினம் பேட்டி.
ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு
மதுரை வைகையாற்றை சுத்தப்படுத்துவதற்கு பணம் வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் எனக் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் மடத்திற்கு சிலர் வந்ததாகவும் அப்போது பணம் தர முடியாது இதனை அரசாங்கமே வேலை செய்ய முடியாது, நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியதால் அவர்கள் தன்றை அவதூறாக பேசிவிட்டு மிரட்டி அவதூறாக பேசியதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம்...,” வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்றேன். அரசாங்கம் இருக்கு மாவட்ட ஆட்சியர் இருக்கிறார், அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது. இதற்கு முன் இருந்த ஆதீனம் எங்களுக்கு கொடுத்தார் என்று கூறினார்கள். அதன் நான், இதே போல்தான் பல வழக்கறிஞர்கள் அவரை ஏமாற்றி விட்டு சென்றனர். அதனால் உங்களுக்கு கொடுக்க முடியாது என்றேன் உடனடியாக அவர்கள் என்னை தாறுமாறாக அவதூறாக பேசி ஆதீனமாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என கூறினார்கள். (மேற்கோள் காட்டி பேசினார்) உங்க வீட்டிற்கு வந்து உனக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு அந்த மாதிரி இருந்தது. காவல் நிலையத்திற்கு எல்லாம் புகார் கொடுக்க நான் போக மாட்டேன் புகார் அளிக்கமாட்டேன் அடிக்கடி என்னை மிரட்டினால் அவர்களை நானே பார்த்துக் கொள்வேன் என்றார். இப்படி ஒவ்வொருத்தனு இறங்குவ அவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா நம்மளே பார்த்துக்குவோம். திருப்பதி லட்டு விவகாரம் அது வைணவம் நான் சைவம் அது குறித்து நான் பேச மாட்டேன், நடிகர்களை பற்றியும் பேசமாட்டேன்.
பழைய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தார் உங்களுக்கு அது தேவை இல்லையா.? என்ற கேள்விக்கு.?
துப்பாக்கி எல்லாம் இருக்கு.! எனக்கு என் வாய் தான் துப்பாக்கி., நான் வாயிலேயே பேசிக் கொள்கிறேன் என்றார். வக்கீல் குருசாமி என்பவர் என்னை மிரட்டினார். வைகையை 20 நாளைக்கு சுத்தம் செய்யணும், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். சுத்தம் செய்ய நீங்களும் வரணும் என என்னை அழைத்தார்கள். எனக்கு அவர்கள் பார்த்தவுடன் சந்தேகம் வந்தது. வக்கீல் என்கிறார், ஒரு நாளைக்கு 15,000 பணம் கொடு என்கிறார். என்னை கூட வைகைக்கு வா.. என்கிறார்கள். என்னை வைகையில் தள்ளி விட்டால்..? என்ன செய்வது, எனக்கு நீச்சல்வேற தெரியாது நீ போங்கப்பான்னு பகல் கொள்ளையா இருக்கே என அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன். உங்களை எல்லாம் தூக்குறதுக்கு தான் பெரியார் தோன்றினார் என பேசிவிட்டு சென்றனர். இதெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெரியாருக்கும் எனக்கும் சண்டையா? நானும் தமிழ் ஆர்வலர், அவரும் தமிழ் ஆர்வலர். பெரியாருக்கும் எனக்கும் சண்டையா என பேசினேன்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கல்வெட்டுப்படி எடுத்தல் பயிற்சி.. விவரம்..