மதுரையில் பெண்ணின் உடலை அடக்கம் செய்தபோது மயானத்தில் மழைக்காக மரத்திற்குள் கீழ் ஒதுங்கியவர்கள் மின்னல்தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கீரனூரில் உடல் நலக்குறைவால் நேற்று காலை அய்யம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறுதி சடங்கு முடிந்து உடலை அடக்கம் செய்ய நேற்று மாலை அய்யம்மாளின் உறவினர்கள் மற்றும்  கிராமத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். உடலை அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் இறுதி சடங்கிற்காக உடலை சுற்றிவந்தபோது திடீரென அங்கு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.  இதனால் மயானத்தின் அருகே இருந்த புளியமரத்தின் கீழ் அந்த கிராமத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் ஒதுங்கியுள்ளனர். அப்போது திடீரென புளியமரத்தின் மீது இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் மரத்திற்கு கீழ் நின்றிருந்தவர்கள் காயமடைந்த நிலையில் வாகனங்கள் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை, திருப்புவனம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

 


 



 

இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6 பேர்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மதுரை கீரனூரை சேர்ந்த செல்வா ( 23 ) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது வரும் வழியிலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த இளசு (எ) அக்னிராஜ் (35) என்பவரும் சிவகங்கை கொண்டுசெல்லும் வழியிலயே உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்னல் தாக்கிய சம்பவத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

மதுரையில் உயிரழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய சென்றபோது மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 



இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு