மதுரையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் மழைநீர் வடிகால்களில் விழுவதால் கால்நடைகளை மீட்பதற்காக அலைக்கழிக்கப்படும் தீயணைப்புத்துறையினர் - நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம்.


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளிலும் மாடுகள், குதிரை, பன்றி உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் அதிகளவிற்கு சுற்றி திரிகின்றன. இதனால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. மதுரை மாட்டுத்தாவணி,  தெற்குவாசல்,  பீபி குளம், ஆனையூர் கூடல்நகர், வள்ளுவர்காலனி, அண்ணாநகர், சிம்மக்கல், கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கால்நடைகள் சாலைகளில் அதிகளவிற்கு சுற்றிதிரிகின்றது.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. முன்கூட்டியே வந்த விஜய்? ... உற்சாகத்தில் ரசிகர்கள்..!





இந்த நிலையில் தற்பொழுது சாலைகளில் சுற்றித்திரியும் பல்வேறு கால்நடைகளும் அய்யர்பங்களா, அண்ணாநகர், மாட்டுத்தாவணி, தெற்குவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் அடிக்கடி உள்ளே விழுந்து சிக்கிக்கொள்கிறது. இதனால்  பொதுமக்கள் அதனை மீட்க முடியாமல் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கும் சூழல் உருவாகிறது. தீயணைப்புத் துறையினரும் அவசர அவசரமாக சென்று பல்வேறு கடினமான சூழ்நிலைகளிலும் கடும் சிரமத்திற்கு ஆளாகி அந்த மாடுகளை மீட்கின்றனர். ஆனால் சில நாட்களில் மீட்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் சுற்றி திரியும் காளைகள் தவறி விழுந்து விடுகிறது.




இதன் காரணமாக தீயணைப்புத்துறையினர் அடிக்கடி சென்று அதனை மீட்கக்கூடிய அலைச்சலுக்கு ஆளக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக அலட்சியமாக இருப்பதால் இதுபோன்று கால்நடைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி தீயணைப்பு துறையினருக்கும் தற்பொழுது சிக்கலாக மாறி அலைச்சலை உருவாக்கியுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு