மதுரையில எங்களுக்கு யாரையும்  தெரியாது அவன் வீட்டிலயே வளர்ந்தவன் அவனுக்கு ரோட்லயே இருக்க தெரியாது என கண்ணீருடன் தொலைந்துபோன வளர்ப்பு நாயை தேடி ஆடியோ வெளியிட்ட பெண்.

மேங்கோவை காணவில்லை


சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பள்ளிகரணை பகுதியை சேர்ந்த அருண் - சங்கவி தம்பதியினர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் நிலையில், அடையாறு பகுதியில் சாலையில் இருந்த நாட்டின நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்துள்ளனர். அதற்கு மேங்கோ என பெயர்சூட்டி 4 ஆண்டுகளாக செல்லமாக வீட்டில் குழந்தையை போன்று வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினருக்கு குழந்தை பிறந்து ஒரு வயது ஆன நிலையில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நண்பனாக இருந்தவந்த வளர்ப்பு நாயான மோங்கோ. தம்பதியினர் கொடைக்கானல், ஊட்டி என எங்குசென்றாலும் காரில் குடும்பத்தோடு சேர்ந்து மேங்கோவையும் அழைத்து சென்றுவந்துள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பாக மதுரை கோமதிபுரம் 6ஆவது தெரு பகுதியில் உள்ள அருணின் தாயார் வீட்டிற்கு தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது தம்பதியினர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வளர்ப்பு நாயான மேங்கோவையும் காரில் அழைத்துவந்துள்ளனர். இந்நிலையில் மதுரையிலுள்ள வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுக்க வந்த கேட் பூட்டாத நிலையில் வளர்ப்பு நாயான மேங்கோ தெருவிற்கு சென்று பின்பு காணாமல் போயுள்ளது. 

 

ரூ. 5 ஆயிரம் பரிசு அளிக்கப்படும்


இதனையடுத்து தம்பதியினர் தனது ஒரு வயது குழந்தையோடு கையில் சுமந்தபடி பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் தேடிவந்துள்ளனர். ஆனாலும் கிடைக்காத நிலையில் தற்போது ஐடி நிறுவனத்திற்கு மூன்று நாட்கள் லீவு போட்டுவிட்டு தங்களது குடும்ப உறுப்பினராக இருந்த வளர்ப்பு நாயான மேங்கோவை தேடி மதுரை முழுவதிலும் சுற்றி வருகின்றனர்.  தம்பதியினரின் வளர்ப்பு நாயான மேங்கோ காணாமல் போன நிலையில் அது குறித்தான தகவல் அளித்து கண்டுபிடித்து தரக்கோரி மதுரை அண்ணாநகர், கே.கே நகர், கோமதிபுரம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பு நாயான மேங்கோவின் படத்துடன் ரூ.5 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என நோட்டீஸ் அடித்து ஒட்டி தேடிவருகின்றனர் 

மேங்கோவை தேடிவருகின்றனர்


மேலும் இதுதொடர்பாக தம்பதியினர் whatsapp உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தனது வளர்ப்பு நாயான மேங்கோவை தேடி உருக்கமான ஆடியோவை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் எங்க மேங்கோ ரொம்ப நல்ல பையன் ! அவனோட சேர்ந்து 4 பேரும் மதுரைக்கு வந்தோம் இப்போ அவன் இல்லாம சென்னைக்கு போக முடியல, அவனுக்கு பண மதிப்பு இல்ல.., எப்டியாவது கண்டுபிடிச்சு தாங்க ரூ.5 ஆயிரம் பண உதவி செய்கிறோம், மதுரையில எங்களுக்கு யாரையும் தெரியாது அவன் வீட்டிலயே வளர்ந்தவன் அவனுக்கு ரோட்லயே இருக்க தெரியாது எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்க என பேசியுள்ளார். தற்போது இந்த ஆடியோ மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் whatsapp சமூக வலைதளங்களில் பரவி வர கூடிய நிலையில் விலங்குகள் நல ஆர்வலர்களும் நாய் வளர்க்கக்கூடிய நபர்களும் தம்பதியினருக்கு உதவ வேண்டுமென எண்ணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொலைந்துபோன  வளர்ப்பு நாயான மேங்கோவை தேடிவருகின்றனர்.

 

மேங்கோவின் அடையாளம்


 

வளர்ப்பின நாயான மேங்கோவின் கழுத்தில் பெல்ட் அணிவிக்கப்பட்டிருக்கும் அதில் எலும்பு போன்ற வடிவில் டாலரில் மேங்கோ என்ற பெயரும் அதன் பின்பாக தங்களுடைய செல்போன் எண்ணும் இருக்கும் எனவும் இதனைப் பார்த்தால் தயவு செய்து எங்களுடைய மேங்கோவை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என உருக்கமுடன் பேசியுள்ளனர்.