மதுரை மேலூர் சாலையில் உள்ளது வெள்ளரிப்பட்டி கிராமம். இங்கு தனியார் பெரு நிறுவனங்கள் செயல்படுகிறது. இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராம மாணவர்கள் இங்கு தான் அதிகளவு படுத்து வருகின்றனர். இவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பாடம் எடுத்து வருகிறார் மாற்றுத்திறனாளி தஸ்லிமாக நஸ்ரின். பி.ஏ., வரலாறு முடித்த இவர் வளர்ச்சி குறைபாடு கொண்டவர்.






 

அதன் தொடர்ச்சியாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் தொடர்பான பாதிப்பை கொண்டவர். இஸ்லாமிய பெண்ணான இவர் இப்பகுதி கிராம பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு எடுப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாற்றுத்திறனாளி தஸ்லிமா சமூக நல்லிணக்கத்தோடும், மாற்றுத்திறனாளிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவதால் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.



 

தஸ்லிமா நஸ்ரின்....," பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன். நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் நான் எடுக்கும் வகுப்பிற்கு வருவார்களோ, வரமாட்டார்களோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அதே சமயம் கூச்ச சுபாவமும் இருந்தது. ஆனால் பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் வரும் போது அவர்களோடு நட்பாக பழகிவிட்டேன். அதனால் என்னை ஆசிரியராக பார்க்காமல் சக நண்பராக மாணவர்கள் பார்க்கின்றனர். என்னால் முடிந்த அளவு கல்வியை கற்பித்து வருகிறேன். பள்ளி வகுப்பு முடிந்த உடன் மீண்டும் டியூசனுக்கு செல்ல வேண்டுமே என்ற அச்சத்தை போக்கி இருக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியாக வருகின்றனர். படிப்பை மட்டுமே சொல்லிக் கொடுக்காமல் விளையாட்டும், படிப்பும் என கலந்து சொல்லிக் கொடுக்கிறேன்.



அதனால் பள்ளி மாணவர்கள் என்னுடைய வகுப்பிற்கு ஆர்வமாக வருகின்றனர்.  விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாசித்தல் மற்றும் ஒப்பித்தலில் செய்யச்சொல்லி ஆர்வம் ஊட்டுவேன். அதனால் விளையாட்டு அறிவும், பொது அறிவும், கல்வி அறிவும் மேம்படும். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பும் கஷ்டமாகவே இருந்தது. எனவே பெற்றோர் கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தார்கள். படிக்கும் காலத்தில் மாணவியர்கள் என்னை வினோதமாக தான் பார்த்து வந்தனர். ஆனாலும் அதையும் மீறி தான் படிப்பை முடித்து வந்துள்ளேன். என்னுடைய முழு முயற்சிக்கு என் பெற்றோர், ஆசிரியர்கள் தான் காரணம். எங்களது ஊர் தலைமை ஆசிரியர் உருதுணையாக இருந்தனர். எனக்கு தேவையான உதவிகளை தற்போதும் செய்து வருகின்றனர்.



என்னால் மாணவர்களை அழைத்து வர இயலாது. அனைத்து மாணவர்களையும் ஒன்றினைத்து என்னிடம் படிங்கள் என அனுப்பி வைப்பார்கள். நான் மாற்றுத்திறனாளி என்பதால் கிராம மக்களுக்கு உதவி செய்கின்றனர். வெள்ளரிப்பட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் பாடம் எடுக்கிறேன். இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. கல்லிவியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அதனால் என்னை அனைவரும் உறவினர் போல எனக்கு ஊக்கம் கொடுக்கின்றனர். நான் கோயில் வளாகத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பூஜை செய்யப்படும், மாணவர்கள் கோயிலில் வழிபட்டு வருவார்கள். நானும் நின்று சாமிகும்பிட்டு வருவேன். என்னை வேற்றுமையாக யாரும் பார்த்ததில்லை. மாணவர்கள் என்னைப் போல் பிறருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் மாற்றுத்திறனாளி என்பதால் மாணவர்கள் என்னை சிரமப்படுத்த மாட்டார்கள். என் பெற்றொருக்கு பின்னால் யாரும் இல்லை. எனது வாழ்க்கைக்கா நிரத்தமான அரசு வேலை இருந்தால், வாழ்க்கைக்கு பயணாக இருக்கும்" என கேட்டுக்கொண்டார்.



 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண