மதுரை மேலூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் சேதம் சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

 

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளரிப்பட்டி கிராமத்தில் முனுகால் புளியங்குளம் கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வெள்ளரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கிராமக் கோவில்களில் 30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் மற்றும் குதிரைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதன் கூறுகையில், “கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக ரூ.30 லட்சம் செலவில் கோவில் சிலைகள் குதிரைகள் எடுத்து வைத்து திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்நிலையில் சமூக விரோதிகள் சிலரின் தூண்டுதலால் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சாமி சிலைகள் மற்றும் குதிரைகளை சேதப்படுத்தி உள்ளனர். எனவே மீண்டும் சாமி சிலைகள் குதிரைகள் அதே இடத்தில் நிறுவப்பட்டு பாலாலயம் செய்து கிராம மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் மேலும் சாமி சிலைகளை சேதப்படுத்திய சமூக விரோதிகள் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை  உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.