2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கு -  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர்  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் - வழக்கின் தீர்ப்புக்காக 12 ஆம் தேதி ஒத்திவைப்பு.


கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது  மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்துவை தாக்கியதாக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.


அரசுப் பள்ளிக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கிய பெண்! - சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த மதுரை எம்.பி




இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற ஜே.எம் - 1  நீதிபதி முத்துலட்சுமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கின் தீர்ப்புக்காக வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி