இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மதுரை மாநகரில் குற்றசம்பவங்கள்ள தடுக்க 63 காவல்துறை ரோந்து பைக்குகள் தயார் - சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாநகர காவல்துறை ஆணையர் பேட்டி.
மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட தல்லாகுளம், மதிச்சியம், திடீர் நகர், அண்ணாநகர், எஸ் எஸ் காலனி, புதூர், செல்லூர், திருப்பாலை உள்ளிட்ட 24 காவல் நிலையங்கள் இயங்கிவருகிறது. இந்த காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ரோந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 63 பைக் ரோந்து வாகனங்கள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 63 ரோந்து வாகனங்களும் ஆயுதப்படை மைதானத்தில் ஒரே நேரத்தில் ஒளிரும் விளக்குகளுடன் சைரன் ஒலியுடன் வலம் வந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகளை தொடங்கினர்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: கோடைகாலத்தில் கொள்ளை.... ஒரே குடும்பத்தை சேர்ந்த கும்பல் கைது - 180 நகைகள் மீட்பு
முன்னதாக ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் அவசர காலகட்டத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். இதில் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன்..,”பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் காவல்துறையினரை எப்போதும் பொதுமக்கள் எளிதாக அணுகுமுறைகளும் இது போன்ற ரோந்து பணிகள் காவல்துறையினர் சிறப்பாக மேற்கொள்ளவுள்ளனர் , 63 ரோந்து வாகன காவல்துறையினரும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் எனவும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருந்து அந்தந்த ரோந்து வாகனங்களை பணிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம் , பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வாகனங்களில் உள்ள மைக் மூலம் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்கள் ரோந்து வாகனங்களில் எப்பொழுதும் ஒளிரும் விளக்குகள் எரிந்தபடி இருக்க வேண்டும் , அப்போதுதான் பொதுமக்களுக்கு ரோந்து வாகனம் பணியில் இருப்பது தெரியவரும்" என்றார்.
மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..,” மதுரை மாநகரில் கண்டிப்பாக இது போன்ற புதிய முயற்சிகள் தேவை. அப்போது தான் குற்றசம்பவங்களை தடுக்க முடியும். அதே போல் கஞ்சா பயன்பாடை குறைக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!