மதுரை  கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாண்டி. இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக முடியாத நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து வைத்தியம் பார்த்திருக்கின்றார்கள். பசுவின் உடல் நிலை  மிகவும் மோசமாக இருந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவர்கள் அதை ஸ்கேன் செய்து எல்லாம் பார்த்த போது வயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




 

அதனை தொடர்ந்து நேற்று மாலை  தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் டாக்டர் வைரவர சாமி தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் அறிவழகன், முத்துராமன், விஜயகுமார், முத்துராம், மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு, உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவாக சுமார் 4 மணி நேரம் போராடி பசு மாட்டின் வயிற்றில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம்  அகற்றி இருக்கிறார்கள்.



 பிளாஸ்டிக் கழிவுகள் ஆணி போன்ற குப்பைகள்  எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களானதால் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை  போன்று இறுகிப்போய் இருந்திருக்கிறது அறுவை சிகிச்சைக்கு பின் தொடர் சிகிச்சைக்காக கால்நடை பன்முக மருத்துவமனையில் மாடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது இது குறித்து டாக்டர் வைரவர் சாமி கூறுகையில்" பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகளை குப்பை மேட்டில் மேய விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். கடையில் மீதமுள்ள இட்லி தோசை போன்ற பொருட்கள் குப்பையில் கொட்டப்படுவதால் அவற்றை இந்த மாடுகள் கால்நடைகள் உண்ணுகின்ற போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.



 

இதனால் கால்நடைகள் மிகவும் அவதிப்படுகின்றன எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை கால்நடை மருந்தகங்களிலும் பலமுறை எடுத்துக் கூறி இருக்கிறார்கள். இருப்பினும் மக்கள் கண்டு கொள்வதாக இல்லை கால்நடை வளர்ப்போர் இது விசயத்தில் சற்று அதிக கவனம் செலுத்தி கால்நடைகளை நல்ல முறையிலே வளர்க்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.

 












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண