மதுரையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய ரூ 50,000 கடனை கட்ட முடியாமல் ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை நாகுப்பிள்ளை தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குப்புமணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.  இந்த நிலையில் இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50,000 கடன் பெற்றுள்ளார். சீனிவாசனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடனை திரும்ப செலுத்த முடியாத நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.



 

மேலும் அவர் செய்த வேலையும் பறிபோன நிலையில் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன்  வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் இவரது மனைவியை குப்புமணி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


 ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.