மதுரை மாநகராட்சி “ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து” புதிய இணைப்பு பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி 8-வது வார்டில் பாலம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்-8 அல்அமீன்நகர் பிரதான சாலை அழகர்கோவில் மெயின் ரோடு இணைப்பு பாலம் அமைப்பதற்கான பூமி பூழை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று (14.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், முன்னிலை வகித்தார்.
சிரமமின்றி எளிதில் செல்வதற்காகவும் புதிய இணைப்பு பாலம்
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், குடிநீர் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.8 அழகர் கோவில் மெயின் ரோடு அல்அமீன் நகர் பகுதி பொதுமக்களின் வசதிக்காகவும் மற்றும் போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்வதற்காகவும் புதிய இணைப்பு பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில்
அதன்படி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அல்அமீன்நகர் பிரதான சாலை அழகர்கோவில் மெயின் ரோடு இணைப்பு பாலம் அமைப்பதற்கு அமைச்சர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்று கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ரவிக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் ராதிகா கெளரிசங்கர், முத்துக்குமாரி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.