கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக வேகமெடுத்த நிலையில் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட சில இடங்களில் நோய்த்தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களைப் பாதுகாக்க ஆந்திர மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், நோய்த்தொற்று பாதிப்பு மட்டும் குறையவில்லை.

 



அதிலும், குறிப்பாக வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர் அதிகளவில் இலக்காகிக் கொண்டிருப்பது ஆந்திர மாநில சுகாதாரத்துறையினரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். வரும் நாளை (7ஆம் தேதி) காலை 6 மணியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு முடியவிருந்த நிலையில் வரும் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.





அரசு ஊழியர்களை தவிர எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழக கீழமை நீதிமன்ற பணிகளுக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 



 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல்பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,  தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக்காவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பலரும் வாட்சப் மூலம் பகிர்ந்தனர். மேலும் (06.06.2021) தேதிக்குள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் எவ்வாறு விரைவாக வேலைவாய்ப்பு பதிவு செய்வதென பலரும் வருத்தம்  தெரிவித்திருந்தனர்.





இந்நிலையில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பணி நியமனங்களுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழக கீழமை நீதிமன்ற பணிகளுக்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன், இந்த தகவலின் ஆணையின் பிரதியை ட்விட்டர்  பக்கத்தில் இணைத்து,  விருப்பமுள்ள நபர்கள்  பதிவு செய்துகொள்ளவும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க - Kumar Shaw Bicycle Day | ”சைக்கிள் என்னோட கருப்பி” : இந்தியா முழுதும் மிதிவண்டியில் பயணித்த கதை சொல்லியின் அனுபவம்!