’அழகர்’ இறைவன் இல்லை மதுரையின் 'தலைவன்' என்று மெச்சும் அளவிற்கும் மத திருவிழாவாக இல்லாமல் மண்ணின் திருவிழா கொண்டாடப்படுகிறது.  கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்கள் சத்தம் விண்ணை அதிரவைக்கும். நான்கு திசையிலும் தங்களது ஹீரோவான அழகரை மக்கள் உள்ளம் உருக வேண்டும், இந்த சித்திரை திருவிழா அபூர்வமானது. இப்படியான இந்த சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலகப்பிரசித்தி பெற்றது.  இந்த நிகழ்வை காண மதுரை வைகையாற்றில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம்.



 

கொரோனா தொற்று காரணத்தால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது.  சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும்.  இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 25 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பார்வதி யானையின் இடது கண்ணில் 'புண்' ஏற்பட்டு வலியால் துடித்துள்ளது. மேலும் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்த நிலையில்  பார்வதி யானை சற்று சோர்வாக உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு மருத்துவ குழு யானைக்கு அளித்த சிகிச்சையின் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை போன்ற நோய் ஏற்பட்டு இருப்பது தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 



 

 

யானைக்கு கண் லென்ஸ் பாதிக்கப்பட்டு  இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால் கடந்த சில நாட்களாக  வீடியோ கான்பிரசிங் முறையில் சென்னையிலுள்ள அரசு கால்நடை மருத்துவர் மூலமாக கண்சிகிச்சை வழங்கப்பட்டு அதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் கண் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் நேற்றைய தினம் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறையில் உள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக வரவழைக்கப்பட்டு அதனை பயன்படுத்தி  மருத்துவர் சிவசங்கர், மதுரை மண்டல உதவி இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் யானை கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையே தொடருமாறு அறிவுறுத்தினர்.

 



 

இதனிடையே யானையின் மருத்துவ பரிசோதனையின் முடிவை பொறுத்து  தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென பிரேத்யேகமாக செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் யானைக்கு இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. யானையின் பார்வையில் தற்போதுவரை எந்த கோளாறும் இல்லை.

 



 

எனினும் முழு பரிசோதனைக்கு பின்புதான் நோய் தொற்று குறித்து தெரியவரும். தற்போது கண்புரை நோய்க்காக மருந்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்தனர்.