தேனி மாவட்டத்தில் வைகை அணை , மஞ்சலாறு அணை , சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை என 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் தமிழக கேரள எல்லையான தேக்கடியில் உள்ள முல்லை பெரியாறு அணையும் உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீர் வரத்தானது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய தேவைகளுக்கும் , குடி நீருக்குமான நீராதாரமாக விளங்குகிறது.



முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீரானது வைகை அணையில் தேக்கப்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு வரும் நீரானது முல்லை பெரியாறு அணையிலிருந்து மட்டுமல்லாமல் சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையிலிருந்து தேக்கிவைக்கப்பட்டு இரு அணைகளின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையை சென்றடையும். கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார  பகுதிகளில் பெய்யும் மழையானது சோத்துப்பாறை அணை , மஞ்சலாறு அணை இரண்டு அணைகளில் தேக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கும் திறந்துவிடப்படும்.



தற்போது சென்ற மாதம் ’டவ் தே’ புயலின் தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து வைகை அணையிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடி நீருக்கும் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது கேரளா மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.



இதனால் கடந்த நாட்களை விட அணைக்கு நீர் வரத்தானது தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மஞ்சலாறு, சோத்துப்பாறை அணை பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணைக்கு நீர் வரத்து தொடந்து அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் முல்லை பெரியாறு அணை உட்பட தேனி மாவட்ட அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.


தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்: 


வைகை அணை,


நிர்மட்டம்  - 66.71 (71 அடி),  நீர் இருப்பு – 4893 மி.க.அடி,  நீர் வரத்து – 840 க. அடி,  நீர் திறப்பு – 969 க.அடி                                                     


முல்லை பெரியாறு அணை, 


நிர்மட்டம்  - 132.75 (142 அடி, நீர் இருப்பு – 5341 மி.க.அடி), நீர் வரத்து – 4289 க. அடி, நீர் திறப்பு – 1400 க.அடி 


மஞ்சலார் அணை, 


நீர்மட்டம்  - 50.0 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மி.க.அடி , நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 0 


சோத்துப்பாறை அணை, 


நிர்மட்டம்  - 126.28 (12.28 அடி) , நீர் இருப்பு – 100.0 மி.க.அடி ,நீர் வரத்து – 3  க. அடி,நீர் திறப்பு – 3 க.அடி 


சண்முகா நதி அணை,


நிர்மட்டம்  - 42.0 (52.55 அடி) ,நீர் இருப்பு – 48.95 மி.க.அடி,நீர் வரத்து – 0 க. அடி , நீர் திறப்பு – 0  க.அடி