மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
விலை அதிகரிப்பு ஏன் தெரியுமா?
தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஜனவரி 30-ம் தேதி, மாதத்தின் கடைசி முகூர்த்தம் மற்றும் தொடர் முகூர்த்த நாட்கள் என்பதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களின் விலையும் உச்சம் தொட்டது. இன்று (31.01.2025) மதுரை மல்லிப் பூவின் விலை மட்டும் கிலோ ரூ.3500ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (31.01.2025)
”மதுரை மல்லி கிலோ ரூ.3,500, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.200, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்கள் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலையில் கணிசமான விலையற்றம் உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது" என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அடிக்கடி ஏற்படும் விபத்து.. மதுரையில் சுரங்கப்பாதை கேட்டு மறியலில் இறங்கிய மக்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CHN Corp. Super Plan: மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...