தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருக்கும்.
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவனி பூ மார்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் பூக்கள் தட்டுப்பாடாகவே உள்ளது.
நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் மல்லிகை பூ கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 600 - 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ ரூ.1500 க்கும், 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த முல்லை பூ ரூ.1500க்கும் சம்பங்கி ரூ.150க்கும், பட்டன்ரோஸ் ரூ.250க்கும் செவ்வந்தி ரூ.150, விற்பனையாகி வருகின்றன. திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு பூக்கள் வாங்குவதற்காக வியாபாரிகளும் பொதுமக்களும் மலர் சந்தையில் குவிந்துவருகின்றனர். இதன் காரணமாக பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்