மதுரை கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் ஊழியரின் மீது லாரி மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் டோல்கேட்டில் காய்கறி ஏற்றிய அந்த சரக்கு லாரி பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசிக்கும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அந்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP EXCLUSIVE : ஓபிஎஸ் ஏன் ஒதுக்கப்படுகிறார் மனம் திறந்த மாஜி அமைச்சர் ஜி.பாஸ்கரன்..!
இந்த நிலையில் கப்பலூர் டோல்கேட்டில் விபத்தில் சிக்கிய ஊழியரை சக ஊழியர்கள் அருகில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் லாரி ஊழியரின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்