மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்

 


தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

 


 



 


பனிப்பொழிவு விளைச்சல் பாதிப்பு

 

தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்  பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.  மதுரை மல்லிகைப் பூ கிலோ 2000் ரூபாய்க்கும்,  பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ 1200 ரூபாய்க்கும், கனகாம்பரப்பூ - கிலோ 1000 ரூபாய்க்கும் அரளிப்பூ 200 ரூபாய்க்கும், பட்டன்ரோஸ் - 120க்கும், செவ்வந்தி -120 ரூபாய்க்கும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பூக்களின் வரத்து சீசன் தொடங்காத நிலையில் இனி வரும் சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



 

 

மல்லிகைப் பூ விவசாயிகள் கோரிக்கை


 

மல்லிகைப் பூ விவசாயிகள் நம்மிடம் கூறுகையில்..,” பருவநிலை தள்ளிப்போவதால் விளைச்சலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் பனி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மல்லிகைப் பூவில் பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் மல்லிகைப் பூ விவசாயம் பல இடங்களில் பாதிக்கப்பட்டு மல்லிகை விவசாயத்தை கைவிடும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். அதனால் அரசு மல்லிகைப் பூ விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாய பணிகளில் மாறுதலை கொண்டு வரவேண்டும்”  என கேட்டுக்கொண்டனர்.