திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடந்திருந்தால் இருந்தால் உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
எல்.முருகன் சாமி தரிசனம்
சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் ஆகியோர் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழகம் முழுவதும் பா.ஜ.க., சார்பாக நடத்தப்பட்டது. அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளுக்கும் நான் வந்திருந்தேன். முதல் படை வீடாக இன்று இந்த முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து விட்டு நானும் காடேஸ்வர சுப்ரமணி அவர்களும் வந்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும் தரிசிக்க உள்ளோம்.
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக இந்து மக்களை பல சைவ வழிபாடு செய்கின்ற, இந்தப் பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931 இல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையும் 33 செண்டை தவிர மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக 1983 இல் வருவாய் ஆவணங்களில் இருந்த பதிவுகளில் தமிழ்நாடு அரசாங்கம் சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். 30 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். 1994 தீர்ப்பின் படி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும். உலகெங்கும் முருகப்பெருமானே வழிபடுகின்ற பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கின்றேன். உடனடியாக இந்து அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது
இந்த கோயில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி, மதுரவீரன் போன்ற சாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால் அது கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை போற்றுவதற்கு பலியிடுவது வழக்கம். எந்த ஒரு முருகப்பெருமான் இருக்கின்ற சைவ, வைணவ தளங்களில் வெளியிடுவது என்கிற சம்பவம் கிடையாது. அப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு எங்கள் தலைவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிலேயே கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை நோக்கம் இதுதான்
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், இந்து முன்னணி சார்பாக மாநிலத் தலைவர் போராடிக் கொண்டே இருக்கிறோம். நமது உரிமை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்வி கொள்கை ஒரு நாளில் கொண்டு வந்தது அல்ல 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய காலகட்டத்திற்கு உலக அளவில் உள்ள சண்டை நிலவரத்தை வைத்து நாம் போட்டி போடும் அளவிற்கு நமது இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதே போல புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் மாணவர்களின் பங்களிப்பை அதில் கொடுப்பதற்காக ஊக்குவிப்பது தான். இந்த தேசிய கல்விக் கொள்கை. தாய் மொழியை புதிய தேசியக் கல்விக் கொள்கை ஊக்குவிக்கின்ற குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை” என்றார்.