காதலர் தினத்திற்கு எதிர்ப்பு..... மதுரையில் இந்து அமைப்பினர் பூங்காங்களில் ஆர்ப்பாட்டம்

காதலர் தினத்தை கலாச்சார பாதுகாப்பு தினம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பினர் பேட்டி.

Continues below advertisement

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் காதலர் தினத்தினை முன்னிட்டு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மதுரை இராஜாஜி பார்க், சுந்தரம் பார்க், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பார்க் , உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும்  காதலர்தினம் கொண்டாடும் வரும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிசத் மாணவர் ஆகிய அமைப்பினர் மதுரை ராஜாஜி பூங்காவிற்கு வருகை தந்த காதலர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து காதல் செய்வது கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி அறிவுரை வழங்கினர். தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கா முன்பாக எதிர்ப்பு முழுக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement


காதலர் தினத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காதலர் தினத்தை கலாச்சார பாதுகாப்பு தினம் மற்றும் இன்றைய தினம் புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் தீவிரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் எனவும் கூறினா்.

அதே போல் திராவிடர் விடுதலை கழகத்தினர் சாதி மத பேதம் நீங்க அனைவரும் காதல் செய்ய வேண்டும், சமூக ஏற்றத்தாழ்வு நீங்க காதல் செய்ய வேண்டும் என காதலிப்பவர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

காதலர் தினத்தினை முன்னிட்டு ஒரே இடத்தில் காதலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Valentines Day 2023: தமிழ் சினிமாவின் ஃபேவரைட் காதல் ஜோடி.. அஜித்துக்கு ஷாலினி மீது காதல் வந்தது இப்படித்தான்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement