காதலர் தினம்.. காதலர்களுக்கு மிகப்பெரிய காவிய தினம். காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல.. பல காதலர்கள், காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை. நம் உணர்வு, அன்பு, மரியாதை என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நமக்கு அளிக்கும் அன்புகுரியவர்களின் அரவணைப்பு... 




தாய், தந்தையர்களுக்காக உயிரை விடாத இந்த மனிதர்கள், தாம் காதலிக்கும் பெண் மற்றும் ஆணுக்காக உயிரையே விட துணிகிறார்கள். வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒருவரிடம் இருந்து பெற நினைப்பது உண்மையான அன்பு மட்டுமே. அது இரத்த உறவை கடந்து ஒரு சிலரது மேல் மட்டுமே அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது. அதையே இங்கு பியார், பிரேமா, காதல் என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கிறோம். உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மதுரையில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர் வாழ்த்து தெரிவித்தனர்.




காதலர் தினத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் ஏராளமான காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் ராஜாஜி பூங்காவிற்கு இன்று வருகை தந்த காதல் ஜோடிகளுக்கு  திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஆதி தமிழர் பேரவையினர் இனிப்புகளை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து காதல் ஜோடிகள் இனிப்புகளை ஊட்டிவிட்டு பரிமாறிக் கொண்டனர். இதனை தொடர்ந்து பூங்கா முன்பாக காதலுக்கு ஆதரவு தெரிவித்தும், காதல் வாழ்க என கூறியும் முழக்கங்களை எழுப்பிய திராவிட விடுதலை கழகத்தினர் இளைஞர்களை சந்தித்து மனிதநேயம் வளர சாதி மத பேதமின்றி காதலியுங்கள் என அறிவுரை வழங்கினர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Valentines Day 2023: காதல் வாழ்க்கை வெற்றிகரமாக அமையணுமா? .. சூர்யா - ஜோதிகா சொல்லும் சீக்ரெட் கேளுங்க...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண