மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மதுரை தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன்.  எனது பெயரில் கடந்த 2016ல் காரியாபட்டி வட்டாட்சியராக இருந்த சின்னத்துரை, போலியாக குடும்ப அட்டை வாங்கியிருந்தார். இதுதொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தேன். ஆனால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்தேன். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக என் மீது பொய்யான புகார்   பதிந்து, அதனடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் வீரணன், காவலர் பாலமுருகன் ஆகியோர் என்னை கடுமையாக தாக்கினர்.

 




 

சிறைத்துறை அதிகாரிகள் சிறையினுள் ஏற்க மறுத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் காவல்துறையினர், மருத்துவர்களை சரிசெய்து, முறையான சிகிச்சை அளிக்காமல் என்னை கொலை செய்யும் நோக்கில் நடந்துகொண்டனர்.  தொடர்ந்து உடல் நலம் மோசமடையவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தேன்.  அது தொடர்பான ஆவணங்களை பெற்றபோது, பல ஆவணங்கள் முறைகேடாக பெற்றிருப்பது தெரிய வந்தது.

 

எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமலேயே மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. காவல் துறையினரோடு இணைந்து கொண்டு மருத்துவரும் இதுபோல நடந்துகொண்டது ஏற்கத்தக்கதல்ல. எனக்கு சிகிச்சை அளித்ததாக பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர் வெண்ணிலாவே சாத்தான்குளம் தந்தை- மகன் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாக சான்றிதழ் வழங்கியவர். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.