திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில்  உள்ள பால்சுனை கண்ட சிவபெருமாள் கோவிலில் மேற்கூரை அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி வழக்கு. - கோயிலில் தற்போது மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது. கூடுதல் வசதிகள் தேவைப்பட்டாலும் அதனை செய்ய தயாராக உள்ளோம்.- அரசு தரப்பு
 
பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில் தொடர்பான வழக்கு
 
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில்  உள்ள அருள்மிகு பால்சுனை கண்ட சிவபெருமாள் கோவிலில் மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில்..,"அருள்மிகு பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் தற்போது மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது. கூடுதல் வசதிகள் தேவைப்பட்டாலும் அதனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
நீதிமன்றத்தை பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டாம்
 
அப்பொழுது மனுதாரர் தரப்பில் தற்போது செய்யப்பட்டுள்ள நிழற்குடைகள் பக்தர்களுக்கு போதுமானதாக இருக்காது எனவே மேலும் விரிவுபடுத்தி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் அரசு தரப்பில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது மனுதாரர் நீதிமன்றத்தை பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டாம் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.