நெல்லை கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு.
நெல்லை கவின் ஆணவப்படுகொலை
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கவின் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதில் சுபாஹினியின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன், மற்றும் தாயார் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமின் கோரி மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை - சரவணன்
அதில், "சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமின் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து 98 நாட்கள் சிறையில் இருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி- யின் இணை காவல் கண்காணிப்பாளர், கவினின் தாயார் தமிழ்செல்வி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.