எந்தப்பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதை சாலை பாதுகாப்பு பிரிவு (Road Safty Wing) அலுவலர்களிடம் கலந்தாலோசித்து சுரங்கப்பாதை அமைக்கலாமா அல்லது ஏதாவது மேம்பாலம் அமைக்கலாமா என்று முடிவு செய்யப்படும்.


அமைச்சர் ஆய்வு

 

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை துறை சார்பில் கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ ஆகிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில்...,”

 

தென்மாவட்ட திட்டங்கள் - அமைச்சர் தகவல்

 

கடந்த 10 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைக்கப்பட்ட பின் தமிழ்நாடு முதலமைச்சர், நெடுஞ்சாலைத்துறைக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கி திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணியும், திருச்சியில் காவிரி மேம்பாலம் கூடுதலாக கட்டும் பணியும் மதுரை மாநகரில் 100 ஆண்டு கால பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்பலோ சந்திப்பு மேம்பாலமும், ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலமும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் எனது தலைமையில் 9 முறையும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாதம் ஒரு முறையும், தலைமை பொறியாளர் அவர்கள் தலைமையில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

 

மதுரையின் முக்கிய பாலங்கள்

 

அப்பலோ சந்திப்பு மேம்பாலம் கட்டிடப்பணிகள் தற்பொழுது 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வர்ணம் பூசுதல், விளக்கு அமைத்தல் உள்ளிட்ட எஞ்சிய 3 சதவீத பணிகள் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் முடியும். இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால், திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தனியார் கல்லூரி நிர்வாகம் நில எடுப்பு தொடர்பாக நீதிமன்ற வழக்கு தொடர்ந்ததன் காரணமாக ஆறு மாதம் கால தாமதமானதால் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் திறந்து வைப்பதற்கு ஏதுவாக மேம்பால பணிகளை விரைவில் செய்து  முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வாரம் ஒரு முறை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

 

ரோலர் க்ராஷ் பேரியர் - தொழில்நுட்பம்

 

நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பாதுகாப்பு பிரிவு மற்றம் தரக் கட்டுப்பாட்டு பிரிவுகள் ஆய்வு செய்த பின்பு தான் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். விபத்துக்களை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் உள்ள வளைவுகளில் பயன்படுத்திய ரோலர் க்ராஷ் பேரியர்(Roller crash Barrier) என்ற அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்.

 

சாலை பாதுகாப்பு பிரிவு

 

மேலும் தெற்குவாசல் மேம்பால பணிகளுக்கான சாத்திய ஆய்வுக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் மேற்கொள்ளப்படும். மேம்பாலம் திறக்கப்பட்ட பின் எந்தப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எந்தப்பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது. என்பதை சாலை பாதுகாப்பு பிரிவு (Road Safty Wing) அலுவலர்களிடம் கலந்தாலோசித்து சுரங்கப்பாதை அமைக்கலாமா அல்லது ஏதாவது மேம்பாலம் அமைக்கலாமா என்று முடிவு செய்து அதற்கான பணிகளை செய்வோம்” - என தெரிவித்தார்.