மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதி  விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


பணிமனைக்கு புகார் தெரிவித்தார்


 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை  செக்காணூரணி கிளையில் இருந்து டிரைவர் நமச்சிவாயம் என்பவர் கடந்த 9-ம் தேதி (TN 58 N - 0631) என்ற எண்ணுள்ள பேருந்தை அரசு பணிமனையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு ஓட்டி வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் காலை 6 மணியளவில்  பேருந்தை இயக்கும்போது நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  நாய்  கால் உடைந்தது. இதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் பணிமனைக்கு புகார் தெரிவித்தார்.

 

அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம்


 

இதன் அடிப்படையில் விசாரணை செய்த நிர்வாகம் அது உண்மை என கண்டறியப்பட்டதோடு  நாய்க்கு சிகிச்சை அளிக்காமல் பணியில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக பணிமனை நிர்வாகம் ஓட்டுனர் நமச்சிவாயத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதி  விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.