ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்;  தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.







மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு யோகா ஆசிரியராக உள்ள எட்வர்ட் வீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து இரு வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக பாரம்பரிய குறித்து எட்வர்ட் வீம் பெற்றோரிடம் நிவேதிகா கூறியதும் தமிழ் பாரம்பரியம் பிடித்துப் போனதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Fishermen Protest: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்.. 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு..




இந்தத் திருமணத்திற்காக  ஸ்வீடன் நாட்டில் இருந்து மணமகனின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் மதுரையில் தங்கியிருந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்தது. ஸ்வீடன் நாட்டின் மணமகனை தமிழகத்தைச் சேர்ந்த பெண் தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.