தென் மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மிக முக்கியமானது. பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மதுரை மலர் சந்தையில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கும் விமானம் மூலம் மலர்கள் அனுப்பப்படுகிறது.


 





 

 



முதல் ரக மலர்கள் மதுரையில் கிடைப்பதால் பலரும் மதுரையில் கிடைக்கும் மலர்களை வாங்க விரும்புகின்றனர்.  பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தாகமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.




 

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில். மல்லிகை பூ கிலோ - 300க்கு விற்பனை, பிச்சி, முல்லை பூக்கள் கிலோ 300 க்கும், பட்டன்ரோஸ் - 80, சம்மங்கி, செண்டுமல்லி பூக்கள் -50,  கனகாம்பரம் - கிலோ 400ரூக்கும் விற்பனை செய்யப்படுகிறது மல்லிகைப்பூ சீசன் என்பதால் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூவின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. மல்லிகை பூ சீசன் என்பதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 20டன் மல்லிகைப்பூ வரத்து உள்ளதால் தற்போது விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்தாலும் பொதுமக்கள் பூக்களை குறைந்த விலையில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.