மதுரையில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் ஆய்வுக்கு சென்ற போது குழந்தைகளை தாலாட்டு பாடி தூங்க வைத்த அங்கன்வாடி மேற்பார்வையாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பாராட்டுதல்களை பெற்றுவருகிறது.
மதுரை மாநகர் வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற அங்கன்வாடி மேற்பார்வையாளர் கற்பகம்பாள் என்பவர் அங்கன்வாடியில் மதிய உணவிற்கு பின்பாக அங்கன்வாடிக்கு வந்திருக்கக்கூடிய குழந்தைகளை தாலாட்டு பாடல் பாடி தூங்க வைத்து அரவணைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோவில் அங்கன்வாடி குழந்தைகளை தாயை போல பாவித்து மடியில் போட்டு தாலாட்டு பாடல் பாடி தூங்க வைக்கும் அங்கன்வாடி மேற்பார்வையாளரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மணல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலால் 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வாழும் விவசாயி
மேலும் செய்திகள் படிக்க - திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் - அன்புமணி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்