மதுரை மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவால் சாதாரண நாட்களிலும் விலை உயர்வுடன் விற்பனையாகும் பூக்கள் - மதுரை மல்லி கிலோ 2500க்கு விற்பனை  - வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தகவல்.

 

மதுரை மல்லிகை 2500 ரூபாய்க்கு விலை உயர்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 



மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக பூக்களின் விலை உயர்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயல்பான நாட்களை விட பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மல்லிகைப்பூ 1 கிலோ -2500் ரூபாய்க்கும், 1 கிலோ பிச்சிப்பூ 800 ரூபாய்க்கும், முல்லை பூ 1000 ரூபாய்க்கும், சம்மங்கி மற்றும் பட்டன் ரோஸ் -150 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 400 ரூபாய்க்கும், செவ்வந்தி -180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

 




 

நேற்று முகூர்த்த நாளில் 1 கிலோ மல்லிகை பூ 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சாதாரண நாட்களிலேயே வரத்து குறைவால் மதுரை மல்லிகை 2500 ரூபாய்க்கு விலை உயர்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று அனைத்து பூக்களின் விலைகளும் இரு மடங்கு உயர்வுடன் விற்பனையாகின்றது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் நாட்களில் பூக்களின் இன்னும் கூடுதலாக விலை அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.