மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவரால் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தந்தைக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது..?
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 33 ) டிரைவராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா வயது 22 இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் ரம்யா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.
திருமணம் ஆனது முதலே சதீஸ்குமாருக்கும், ரம்யாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ரம்யா கொடுமை தாங்காமல் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, ரம்யாவை அவரது அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இப்படியான சூழலில் கடந்த மே 6ம் தேதி சதீஸ்குமார் ரம்யாவிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது, பகலில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறு ஆக மாறியது இதில் சதீஷ் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் இடம் விசாரணை செய்து வந்தனர்.
நிவாரணம்:
இந்த நிலையில், கொலை செய்த சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர்களான செல்வம், பஞ்சவர்ணத்தை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, கொலையான கர்ப்பிணி பெண் ரம்யாவின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டபோது பெற்றோர் வாங்க மறுத்தனர்.
தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கீருதவி தொகையாக ரூ. 12 லட்சம் வழங்க அரசு முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை ரம்யாவின் தந்தையான செல்வத்திடம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கோட்டூர்சாமி வழங்கியதை தொடர்ந்து உடலை பெற்று சென்றனர்.