இன்று 06.01.2026 மற்றும் நாளை 07.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என - மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மதுரை வருகை - திண்டுக்கல் பயணம்
 
தமிழ்நாடு முதலமைச்சர் விமானம் மூலம் மதுரை மாநகரத்திற்கு 06.01.2026 அன்று வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்று மீண்டும் 07.01.2026 அன்று மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல உள்ளதால் மதுரை விமான நிலையம், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பயணிக்கும் வழிகள், தங்குமிடமான GRT Hotel மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் 06.01.2026 மற்றும் 07.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
 
இரண்டு நாட்கள் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க தடை
 
மேலும், 06.01.2026 மற்றும் 07.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்தார்.