இணையதளத்தில் பதிவு செய்து தங்களது கல்விச்சான்றிதழ்கள் நகல் மற்றும் Bio- Data உடன் முகாமிற்கு வரவும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரில் வருகின்ற 10.01.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10,000 வேலைவாய்ப்புகளுடன் 250-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. இம்முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்களது கல்விச்சான்றிதழ்கள் நகல் மற்றும் Bio- Data உடன் முகாமிற்கு வரவும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.
இணையத்தில் பதிவு செய்யலாம்
சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, தூத்துக்குடி, திருச்சி போன்ற பெருநகரங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதுமிருந்து தகவல் தொழில்நுட்பம், மூலதன பொருள்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, வங்கி துறை, ஆயுள் காப்பீடு, ஜவுளி, சில்லறை வணிகம், நிதி சேவைகள், மருத்துவத்துறை, உணவு உற்பத்தி ஆகிய 20க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து 250 முன்னணி நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித்தேர்வுகளுக்கு கோ.புதூரில் உள்ள இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்படுகின்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இலவசமாக பதிவு செய்யப்படுகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி தொகை விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாவட்ட திறன் அலுவலகம் சார்பில் இவ்வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை மற்றும் அரசு சான்றிதழுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சிக்கும் இம்முகாமில் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைநாடுநர்கள் அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.