மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பழையசுக்காம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதன் அருகே பல்வேறு தனியார் பள்ளிகளும் அரசு துவக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு புதிதாக மதுபானக் கடை அமைக்க முடிவு செய்து இன்று அதனை திறப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 1-வது வார்டு தி.மு.க., கவுன்சிலரான பாண்டி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பொதுமக்கள் சேர்ந்து நீங்க தேர்தலுக்கு பின் ஆளேயே காணவில்லை என கூறி கவுன்சிலரை திட்டி விரட்டி அனுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போதைய சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதற்கு முன்னதாக அவரிடம் "2 கிலோ மீட்டர் கடந்து ரேஷன் பொருட்கள் வாங்க பல்லவராயன்பட்டி செல்கிறோம் என, அதற்காக எங்கள் பகுதியில் ரேஷன் கேட்டோம். ஆனால் தற்போது எப்படி டாஸ்மாக் கடை மட்டும் வந்தது" என கவுன்சிலரை கேட்டு திணறடித்தனர். அப்போது கவுன்சிலர் பாண்டி, “குறிப்பிட்ட ரேஷன் அட்டை தாரர்கள் இருந்தால் தான் ரேஷன் கடை கொண்டு வர முடியும்" என தெரிவித்தார். இந்த சம்பவம் வாக்குவாதமாக முற்றவும் கவுன்சிலரை தனியே செல்ல சொல்லி அறிவுறுத்தினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!