நடிகரும், கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்

மதுரையில் பொதுமக்கள், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் போலந்து நாட்டில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரர் என காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Continues below advertisement

ஷிஹான் ஹூசைனி உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்

 
திரைப்படம் மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஹுசைனி (60 வயது) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த சூழலில் அவரது சொந்த ஊரான மதுரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்

 
மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி என்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்து 400 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார், என்பது குறிப்பிடதக்கது. அவர் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட நிலையில் அவரது உறவினர் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
 

அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் 

 
இதனிடையே பொதுமக்கள், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் போலந்து நாட்டில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரர் என காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola