அருங்காட்சியக அதிகாரிகள் நடிகர் வடிவேலுக்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்ட முக்கிய பொருள்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினர்.
கீழடி அருங்காட்சியகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. அதே போல் கீழடி அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் நடிகர் வடிவேலு கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுச் சென்றார்.
கீழடி தொல்லியல் அகழாய்வுத் தளத்தில் நடிகர்
சிவகங்கை மாவட்டம், மதுரை அருகேயுள்ள கீழடி தொல்லியல் அகழாய்வுத் தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்கு நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வுத் தளம் தமிழர்களின் பண்டைய நாகரிகம் பற்றிய முக்கிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழமையான பொருள்கள், மண்பாண்டங்கள், எழுத்துக்களுடன் கூடிய பொருள்கள் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்தவை குறித்து அவர் ஆவலுடன் ஆராய்ந்தார்.
வடிவேலு வருகையால் திரண்டிருந்த மக்கள்
அருங்காட்சியக அதிகாரிகள் நடிகர் வடிவேலுக்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்ட முக்கிய பொருள்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினர். கீழடி அகழாய்வு தமிழர்களின் முன்னேற்றம் மற்றும் அறிவியலின் வளர்ச்சி பற்றிய புதிய தகவல்களை வழங்குவதாகவும், இது பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அருங்காட்சியக வளாகத்தில் உள்ள புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, பொதுமக்களுடன் சந்தித்து உரையாடினார். அவரது வருகையால் அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாகமடைந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -மதுரையின் ரத்த சரித்திரம்.. 22 வருட பகை.. 22 கொலை.. 2 கேங்குக்கு இடையே நடப்பது என்ன? கேங் வாருக்கு யார் காரணம்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thiruparankunram: கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் சரியாக இல்லை - நீதிபதிகள் கருத்து