22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஸ்சந்திர போஸ் என்ற ரவுடியை பிடிக்க சென்றபோது காவல் ஆய்வாளரை துப்பாக்கியால் தாக்க முயன்றதால் சுபாஷ் சந்திரபோஸ்  என்கவுண்டர் செய்த காவல்துறையினர். 

Continues below advertisement

காவல்துறையினர் சோதனை

மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கிளாமர் காளி கொலை வழக்கில் வேறு ஏதேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வீ.கே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் இரு தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 கிலோ கஞ்சாவுடன் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்த போது, காவல்துறையினர் கைது செய்து அவரிடம் மாட்டுதாவணி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தெப்பக்குளம் பகுதியில் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தேடுதல் வேட்டை
 
இதனை அடுத்தாக சுபாஷ் சந்திர போஸ் கிளாமர் காளி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ்யை தனி படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விளாச்சேரி பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் மதுரை சிலைமான் எல்கை பகுதி அருகே காட்டுப்பகுதியில் அவரை கைது செய்வதற்காக முயற்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினரை தாக்கியதால் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிந்துள்ளார்.
 
காவல் ஆணையர் தகவல்
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் அளித்த காவல் ஆணையர் லோகநாதன்..,” சுபாஷ் சந்திரபோஸ் மீது கிளாமர் காளி கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கக்கூடிய நிலையில், அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினர். அப்போது அவர் துப்பாக்கி வைத்து காவல் ஆய்வாளரை சுட முயன்ற போது, பாதுகாப்பு கருதி காவல் ஆய்வாளர் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் இதுபோன்று தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  கைது செய்யப்பட முயன்றபோது அவர் ஆய்வாளரையே சுட முயன்றதால் தான் என்கவுண்டர் செய்துள்ளோம்” என்றார்.
 
 

Continues below advertisement