சினிமா பாணியில் துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 812 கிராம் தங்கத்தை வயிற்றில் கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
உருண்டை வடிவில் தங்கம்
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று துபாயில் இருந்து காலை 10:35 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரிய வந்தது.
பேஸ்ட் வடிவிலான தங்கம்
அவரிடம் விசாரணை செய்ததில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபுபக்கர் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவரது வயிற்றில் இருந்த கேப்சூல் உருண்டைகளை மருத்துவர்கள் அதிகரிகளின் மேற்பார்வையில் இனிமா கொடுத்து வெளியே எடுக்கப்பட்டது. அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 58 லட்சத்து 34 ஆயிரத்து 220 ரூபாய் மதிப்புள்ள 812 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. எனவே தங்கத்தை கொண்டு வந்த முகமது அபுபக்கரிடம் அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சூர்யா நடித்த அயன் திரைப்பட பாணியில் தங்கம் கடந்திவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மதுரை விமான நிலையம் குறித்த செய்தி
துபாய் விமானத்தில் நேற்று அதிக எடை காரணமாக 100 பயணிகளின் உடமைகள் மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று துபாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டது.
துபாயிலிருந்து 186 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 10.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. மதுரையிலிருந்து துபாய்க்கு 185 பயணிகளுடன் பகல் 12.20 மணிக்கு புறப்பட்டது. மேலும் நேற்று துபாய் சென்ற பயணிகள் 100 பேரின் உடமைகள் இன்று துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒரு கோடியே 17 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தர மனு ; ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்ய - TN Weather Update: கோடை மழைக்கு தயாரா மக்களே..? வரும் 7 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!