மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நாரயணபுரம் பகுதியில் உரிய பாதுகாப்பு கவசம் இன்றி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.
மதுரை மாநகராட்சி உட்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாத நிலையில் சிறிய அளவிற்கான சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர கால்வாயில் சில இடங்களில் மனித கழிவுகளும் கலக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதாக வந்த புகாரையடுத்து தூய்மை பணியாளர்கள் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணியாத நிலையில் கழிவு நீரில் இறங்கி பணி செய்யக்கூடிய காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இது போன்ற தூய்மை பணிகளில் ஈடுபடக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையிலான இது போன்று கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்