அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தை விளக்கிக் கொண்டார்.

மதுரை மாநகராட்சி
 
மதுரை மாநகராட்சியில் 45 வது வார்டு காமராஜர்புரம் அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி தனது வார்டில் சாக்கடை மற்றும் குடிநீர் பிரச்னை இருந்து வருவதாகவும் அதனை விவாதிக்க மாமன்ற கூட்டம் வந்ததாகவும் ஆனால் அதற்கான அந்த வாய்ப்பை வழங்கப்படாமல் கூட்டம் தொடங்கிய நான்கு நிமிடத்தில் முடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் எனது இந்த வார்டு பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற கூட்ட அரங்கிற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தை விளக்கிக் கொண்டார்.
 
அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாமன்ற கூட்ட அரங்கில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கூட்ட அரங்கு இருள் சூழ்ந்தது, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம் துணை மேயர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி போராட்டத்தை விளக்கிக் கொண்டார்.
 
எப்படி தீபாவளி கொண்டாடுவது.
 
தீபாவளி சமயத்தில் என் வார்டில் குப்பை மற்றும் சாக்கடைகள் நிரம்பிக் கிடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனால் எவ்வாறு வார்டு மக்கள் நிம்மதியாக தீபாவளி கொண்டாட முடியும் என தனது எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.