மதுரை மாநகராட்சியில் 1 கோடியே 50 இலட்ச ரூபாய் வரி வசூல் நிதியிழப்பு குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைத்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு.
வருவாய் உதவியாளர்கள் பணியிடை நீக்கம்
Madurai Corporation; மதுரையில் 100- வார்டுகளை கொண்ட மாநகராட்சி வருவாய்த் துறையில் வரி வசூலில் சொத்துகளின் வரியை குறைத்து மதிப்பீட்டு 1 கோடியே 50 இலட்ச ரூபாயை நிதியிழப்பு ஏற்படுத்தியதாக 5
வருவாய் உதவியாளர்களை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் மட்டும் சுமார் ரூபாய் 97 கோடி வருவாய் ஈட்ட முடிகிறது. மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட பில் கலெக்டர்கள் வரிவசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சம்மந்தப்பட்ட பகுதி கணினி வசூல் மையங்களுக்கு ஏற்ப பில் கலெக்டர்களுக்கு தனித்தனியாக மாநகராட்சி நிர்வாகம் ஐ.டி மற்றும் பாஸ் வேர்டு வழங்கியுள்ளது. கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய 5 மண்டலங்களில் வரி வசூலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடிக்கு வரி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணையர் தினேஷ்குமாருக்கு புகாராக சென்றுள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் குழுவை கமிஷனர் நியமித்து ஆய்வுக்குட்படுத்தி விசாரணை நடந்தது, மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரியும் பில் கலெக்டர்களில் 5 பேர் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதலாக வரி வசூலிக்க வேண்டிய கட்டிடங்களின் வரியை குறைத்திருக்கின்றனர். இவ்வாறு பில் கலெக்டர்கள் மாநகாட்சியில் விதிக்கப்பட்ட வரியை சுமார் ரூ.150 கோடி வரை முறைகேடாக குறைத்துக் காட்டியுள்ளனர் என்பது தெரிவந்தது, குறிப்பிடதக்கது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை
கணினி கடவுசொல்லை தவறாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு நிதியிழப்பை ஏற்படுத்திய நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தவறு செய்யாதவர்களை விட்டு விட்டு தவறே செய்யாதவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேரின் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தியும், 100 க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மாநகராட்சி மண்டலம் எண் 3 ஐ முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வருவாய் உதவியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக போரட்டத்தை நிறுத்தப்பட்டது
பேச்சுவார்த்தையின் முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன, அதன்படி மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விசாரணை குழுவிடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 வருவாய் உதவியாளர்களும் நாளை விசாரணைக்கு ஆஜாராக உள்ளதாகவும், தவறு செய்யவில்லை என உறுதியானல் 5 பேரிடன் பணியிடை நீக்கம் ரத்து செய்வதாகவும், தவறு நிரூபணம் ஆகவில்லை என்றால் 5 பேர் வழியாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்டு தற்காலிகமாக போரட்டத்தை நிறுத்தப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Irukkangudi Mariyamman : நோய் தீர்க்கும் இருக்கன்குடி மாரியம்மன்.. வேண்டியதை தரும் சக்தியென குவியும் பக்தர்கள்..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - லேட்டரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப்பணி; எஸ்சி, எஸ்டி, ஓபிசி வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதா?- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்