கோடை காலம் துவங்கிய நிலையிலேயே வெயில் கடுமையாக இருந்து வருகிறது. மதுரையில் 36 செல்சியை தாண்டி வெயில் மண்டையை பிளக்கிறது என மதுரை மக்கள் நொந்து கொள்கின்றனர். இதனால் தண்ணீர்ப் பழம், நீர் மோர், இளநீர், வெள்ளரி என குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை அதிகளவு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

 





இந்நிலையில் மதுரை அழகர்கோயிலுக்கு உட்பட்ட சுந்தரராஜ பெருமாளின் யானைக்கு வெயிலை சமாளிக்க பிரத்யேக குளியல் தொட்டி கட்டி பாதுகாக்கப்படுகிறது. 17 வயதுடைய கோயில் யானை சுந்தரவள்ளித் தாயார் யானைக்கு தினமும் மாந்தோப்பில் பயிற்சி அளிப்பது வலக்கம். அதற்கு பிடித்த பழங்கள், காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை அழகர்கோயில் கோவில் நிர்வாகம் பார்த்து, பார்த்து செய்து வருகின்றனர்.



 





பாகனிடம் சுட்டியாகவும் பக்தர்களிடம் அன்பாகவும் இருந்து வரும் சுந்தர வள்ளித் தாயார் யானைக்கு சீதோசன நிலையை எட்ட வெயிலுக்கு இதமாக குளியல் தொட்டி கட்டப்பட்டு குளித்து விளையாடும்படி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மலை உச்சில் இருந்து அடிவாரத்திற்கு வரும் நூபர கங்கை தீர்த்த நீர் யானை விளையாடி குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் வெயிலில் இருக்கும் கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைத்ததால் சந்தோசத்தில் நீரில் யானை விளையாடிவருகிறது.