தேனி - போடி இடையே ரயில் சோதனை ஓட்டம் - ஆர்வத்துடனும் , உற்சாகத்துடனும் வரவேற்ற மக்கள்

தேனி - போடி இடையே ரயில் பாதையில்  ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக தேனியில் இருந்து ரயில் என்ஜின் போடிக்கு வந்தது. இதனை பொதுமக்கள் பாா்த்து ரசித்ததுடன் உற்சாகமாக வரவேற்பும் அளித்தனர்.

Continues below advertisement

மதுரை - போடி இடையே 90 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேரேஜ் ரயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட விளை பொருட்கள், இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், தேனி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், வணிகர்களுக்கு தேவையான சரக்குகளை கொண்டு வருவதற்கும் இந்த ரயில் பாதை திட்டம் மிகவும் பயன் அளித்தது. இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

Continues below advertisement

DGE: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம்; அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை உத்தரவு

இதற்காக சுமார் 83 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரயில், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்புடன் தண்டவாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் முடங்கி கிடந்தன. கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் ரூ.127 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு பணிகள் தீவிரம் அடைந்தன.

CM Stalin : மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


இந்நிலையில் மதுரை, போடி இடையே அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை, தேனி வரை பணிகள் முடிவடைந்து கடந்த மே மாதம் முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேனி,போடி இடையேயான 15 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் என்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து தேனி - போடி இடையே ரயில் பாதையில்  காலை 10 மணி அளவில் ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக தேனியில் இருந்து ரயில் என்ஜின் போடிக்கு வந்தது. இதனை பொதுமக்கள் பாா்த்து ரசித்ததுடன் உற்சாகமாக வரவேற்பும் அளித்தனர்.

’வீட்டிலிருந்து பணிபுரிய மடிக்கணினி...” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு


தங்கத்துக்கு நிகராக மல்லிகைப் பூ..! கிலோ ரூ 5,000க்கு விற்பனை; அதிரடி விலை உயர்வு..! காரணம் என்ன?

மேலும் என்ஜின் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் போடியில் இருந்து தேனிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. அதனை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது 120 கி.மீ வேகத்தில் புழுதி பறக்க ரயில் என்ஜின் தேனி நோக்கி சென்றது. 15 கி.மீ. தூரத்தை 9 நிமிடம் 20 வினாடியில் அந்த ரெயில் என்ஜின் கடந்து சென்றது. ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் தற்போது ரயில் நிலையம் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையம் முழுவதும் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் அடுத்த ஜனவர மாதம் 15-ந்தேதிக்குள் தேனி,போடி இடையே ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola