அதிமுகவை குறைத்து மதிப்பீடு செய்வதாக கூறி வாய்க்கு வந்ததை உதயநிதி ஸ்டாலின் உலரக்கூடாது - ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
எப்போது அதிமுக நினைப்புதான்
முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோவில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது...,” தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். குறிப்பாக தூங்கும் போதும், நடமாடும்போதும், உணவு உண்ணும் போதும், சிந்திக்கும் போதும் அவருக்கு இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக தெரிகிறது. அங்கே நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை என்றும். பாஜக கூட்டணி இல்லை என்று முதலில் கூறியவர்கள் அமிர்ஷா முன்னிலையில் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள் என்றும். சென்னையில் ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர் அமிர்ஷா அலுவலம் தான் அதிமுக அலுவலகம், அந்த அளவில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர் என்று பேசியது மட்டும் மல்ல, திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி என 27 அணிகள் உள்ளது. ஆனால் அதிமுகவில் இபிஎஸ் ,ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் என பல அணிகள் உள்ளது என்று எள்ளி நகையாடி, தனக்குத்தானே திருப்தி கொண்டு சொந்தக் கட்சிக்கார்களை நம்பிக்கையூட்ட அடுத்த கட்சியிடம் பஞ்சாயத்து பேசும் ஒரு இயக்கம் அதிமுக என்று வாய்க்கு வந்ததை உதயநிதி ஸ்டாலின் உலரிகொட்டி உள்ளார் .
ஆத்ம திருப்தியை அடைந்து கொள்கிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினே உங்கள் முகவரி என்ன? உங்கள் தாத்தா, உங்கள் தந்தை உழைப்பின் மூலம் உள்ள முகவரியை வைத்துக் கொண்டு இன்றைக்கு புகாரி ராகம் என்று ஒப்பாரி வைத்து வருவதை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யலாம் அதற்கு நாகரீகம் உள்ளது, அரசியல் மரபு உள்ளது, ஆனால் தனிநபர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப, திரும்ப நீங்கள், எத்தனை முறை அடித்தாலும் கேட்டாலும் சொல்லாதே என்பது போல நீங்கள் இது போல கூறி உங்களையே நீங்கள் ஆத்ம திருப்தியை அடைந்து கொள்கிறீர்கள்?
அரிதாரம் பூசலாம் ஆனால் அதை மக்கள் நம்ப தயாராக இல்லை
மக்கள் நலனை மறந்து, அதிமுகவின் எதிர்காலம் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம், கவலை வேண்டாம். கொட்டும் மழையில் ராபின்செட் பூங்காவில் அண்ணா உருவாக்கிய திமுகவை இன்றைக்கு உங்கள் குடும்ப சொத்தாக்கிய பெருமை உங்களுக்கு தான் உண்டு. இன்றைக்கு திமுகவை அடகு வைத்து தமிழ்நாட்டை குடும்ப சொத்தாகிக்கொள்ள இது போன்ற வசனங்களை பேசி வருகிறீர்கள், அதற்கான வசனத்தை எல்லாம் அலங்கார செய்தியாக்கி, அரிதாரம் பூசலாம் ஆனால் அதை மக்கள் நம்ப தயாராக இல்லை. 2025 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாருக்கு மக்கள் தீர்ப்பு வழங்க தயாராகி விட்டார்கள். பிஜேபி கூட்டணி பற்றி எடப்பாடியார் தகுந்த விளக்கங்களை கொடுத்து விட்டார், அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எழுச்சி பயணத்தில் உங்களுக்கும், உங்கள் தந்தையாருக்கும் சரியான சவுக்கடியான பதிலை கொடுத்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.