தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் தனது மகன் தினேஷ்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டி உயிரிழந்த தினேஷ் குமார் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 3 மணி தொடங்கி  இரவு 9 மணி வரை அண்ண நகர் மற்றும் கே.கே நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்நிலையில் ஆறு மணி நேர போராட்டம் காரணமாக மாநகர் முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் தினேஷ்குமாரின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பின்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தினேஷ் குமார் தரப்பினர் கடிதம். இதனிடையே தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அண்ணாநகர் பிரதான சாலை, மருத்துவமனை பிணவறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement