தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவின் படம் திரையில் வெளியாகி சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வெளியாகிய திரைப்படம் கங்குவா.

கங்குவா ரிலீஸ்:


சூர்யாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு படம் வெளியாகிய நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா. தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலையிலே வெளியாகிவிட்டது.


விஜய், அஜித்திற்கு நிகராக சூர்யாவிற்கும் ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீட்டின்போது அவரது ரசிகர்கள் அந்த படங்களில் அந்த நடிகர்களின் கெட்டப்புகளில் படம் பார்க்க வருவது வழக்கம். ரஜினி, கமல். விஜய், அஜித் போன்ற பல நடிகர்களின் படங்களுக்கும் இதுபோன்று ரசிகர்கள் வந்துள்ளனர்.


கங்குவா கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த ரசிகர்:






சூர்யா இந்த படத்தில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால தமிழராக நடித்துள்ளார். கேரளாவில் கங்குவா படம் வெளியான திரையரங்கில் ரசிகர் ஒருவர் கங்குவா கெட்டப்பில் படம் பார்க்க வந்துள்ளார். கங்குவா கெட்டப்பில் படம் பார்க்க வந்தது மட்டுமின்றி கங்குவா படத்தில் சூர்யா பேசும் வசனமான உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா? எதிர்கொள்வோம். எதிரி கொல்வோம்” என்ற வசனத்தையும் பேசுகிறார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

14 ஆயிரம் திரையரங்குகள்:


சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். அவர் உதிரன் என்ற குரூரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். வெற்றி பழனிசாமி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஷாத் யூசூப் எடிட்டிங் செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் சுமார் 14 ஆயிரம் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கங்குவா படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சிவாவுடன் இணைந்து ஆதி நாராயணா திரைக்கதை எழுதியுள்ளார். மதன் கார்க்கி வசனங்கள் எழுதியுள்ளார். சூர்யா திரை வாழ்விலே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.