மதுரை மாவட்டம் பேரையூர் அருகே  உள்ளது சின்னகட்டளை கிராமம். இங்கு இயங்கி வரும் அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக சிறந்த  முறையில் 5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைத்துக் கொடுத்த அதே கிராமத்தைச் சேர்ந்த "கட்டளை இளைஞர் அறக்கட்டளை குழுவினருக்கு பாராட்டு குவிகிறது. புதிய கழிப்பறை கட்டிடத்தை பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் திறந்து வைத்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னகட்டளை கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 250க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 




 

கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் சிதலமடைந்து காணப்படும் பள்ளிகளின் கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை சீரீமைப்பதற்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சின்னகட்டளை அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளியும் ஒன்று., இங்கு பள்ளி மாணவிகள் பயன்படுத்தி வந்த கழிவறை கட்டிடம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகள் பயன்படுத்தி வந்த கழிவறை கட்டிடம் செயல்பாடு அற்று இருந்ததால் பள்ளியில் பயிலும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 



 

இதனைத் தொடர்ந்து., பள்ளி மாணவிகளின் நிலையை அறிந்த அவர்களது பெற்றோர்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்த "கட்டளை இளைஞர் அறக்கட்டளை" குழுவிடம் தகவல் தெரிவித்து மாணவிகளுக்கு கழிவறை கட்டிடம் அமைத்து தர வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து., அக்குழுவினர் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் 5.5 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன முறையில் தற்சார்பு முறையில் அறக்கட்டளை இளைஞர்களே யாரிடமும் நிதி உதவி பெறாமல் தங்களது சொந்த பணத்தில் கழிவறை கட்டிடங்கள் கட்டி முடித்து இன்று பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் சேடப்பட்டி ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன்., பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் தலைமையில் இளைஞர் அறக்கட்டளை குழுவினர் விழா ஏற்பாடு செய்து திறந்து வைத்தனர்.